ஜிண்கர்தடாவின் பெயர் காரணம் தெரியுமா உங்களுக் கு ? ஜிகர் என்றால்
ஹிந்தியில் இதயம் என்று அர்த்தம், தண்டா என்றால் குளிர்ச்சி என்று அர்த்தம்.....இதன் தமிழ் பெயர் "இதயத்திற்கு குளிர்ச்சி தரும் பானம்" ! முகமதியர்கள் மதுரை நகரை ஆண்டபோதும், நமது முஸ்லிம் சகோதரர்கள் இங்கு வந்து குடியேறியபோதும் நமக்கு கிடைத்தது இந்த பானம்.
பால் - 1 டம்ளர்
பாதாம் ரெசின் - 2 ஸ்பூன்
சர்பத் - 4 ஸ்பூன்
சீனி - தேவையான அளவு
ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்
ஐஸ்கட்டி - தேவையான அளவு
செய்முறை :
பாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும். பின்னர் தேவையான அளவு சீனி சேர்த்துக் குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும். பாதாம் ரெசினை எடுத்துக்கொண்டு தண்ணீரில் கழுவி 8 மணிநேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரில் குளிரவைத்த பால் கலவையை ஊற்றி, பிறகு, ஊறி இருக்கும் பாதாம் ரெசினை அதில் ஒரு ஸ்பூன் விடவேண்டும். இதில் வேண்டிய அளவு சர்பத் ஊற்றி, நமக்குத் தேவையான ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம் போட வேண்டும். அதற்கு மேல் கொஞ்சம் பாலாடையினை மிதக்க விட்டால், ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி!

ஜிகர்தன்டாவில் சேர்க்கபடுவது என்பது பால், பாதாம் ரெசின், கடல் பாசி / பாலாடை, சர்பத், சீனி, ஐஸ்க்ரீம் மற்றும் ஐஸ்கட்டி. இதில் உங்களுக்கு தெரிந்ததுதான் எல்லாமே..... கடல் பாசியை தவிர. கடல் பாசி என்பது கடலில் இருந்து கிடைக்கும் பாசி அல்ல. அதன் தோற்றத்தை வைத்து அந்தப் பெயர் வந்திருக்க வேண்டும். இது ஒரு வித செடியின் தண்டுப் பகுதியில் இருந்து எடுக்கப்படும், நைலான் போன்ற நார்ப்பகுதி. இதை China grass என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஜெல்லி வகை இனிப்புகள் இதில் இருந்துதான் செய்கின்றனர்.
தேவையான பொருட்கள்:
பால் - 1 டம்ளர்
பாதாம் ரெசின் - 2 ஸ்பூன்
கடல் பாசி / பாலாடை - தேவையான அளவு
சர்பத் - 4 ஸ்பூன்
சீனி - தேவையான அளவு
ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்
ஐஸ்கட்டி - தேவையான அளவு
செய்முறை :
பாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும். பின்னர் தேவையான அளவு சீனி சேர்த்துக் குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும். பாதாம் ரெசினை எடுத்துக்கொண்டு தண்ணீரில் கழுவி 8 மணிநேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரில் குளிரவைத்த பால் கலவையை ஊற்றி, பிறகு, ஊறி இருக்கும் பாதாம் ரெசினை அதில் ஒரு ஸ்பூன் விடவேண்டும். இதில் வேண்டிய அளவு சர்பத் ஊற்றி, நமக்குத் தேவையான ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம் போட வேண்டும். அதற்கு மேல் கொஞ்சம் பாலாடையினை மிதக்க விட்டால், ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி!
No comments:
Post a Comment