Sunday, 16 June 2013

ராஜபாளையம் நாய்








ராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ? ம்ம்ம்....கரக்ட், நாய் !! ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால் அது ஆள் உயரம் இருக்கும், எழுந்து நின்றால் கன்றுக்குட்டி உயரம் இருக்கும், மோப்ப சக்தி அதிகம்.  
இராஜபாளையம் நாய்களின் பூர்வீகம் ஆந்திரம். விஜயநகரப் பேரரசின் சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்ததும், கிருஷ்ண தேவராயரிடம் படை வீரர்களாக இருந்தவர் பிழைப்பிற்காக தென் தமிழகத்திற்கு வந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வேட்டைக்குப் பயன்படுத்திய நாய்களையும் தங்களுடன் அழைத்து வந்தனர். மன்னர் காலத்தில் தளபதிகளும், படை வீரர்களும் தங்கும் பகுதிக்கு "பாளையம்' என்று பெயர். ராஜாக்களிடம் பணிபுரிந்தவர்கள் தங்கிய இடம் என்பதைக் குறிக்கும் வகையில் "ராஜ பாளையம்' என்று அழைக்கப்பட்டு அதுவே இப்பொழுது ராஜபாளையம் என்று அழைக்கப்படுகிறது. ராஜபாளையம்  வகை நாய்கள் 55 பவுண்ட் எடை இருக்கும். மிகவும் வலிமையாக உடல் அமைப்பு கொண்டது. வேகமாக ஓட கூடியது. பொதுவாக வெள்ளை நிறம் அல்லது பிங்க் நிறத்தில் இந்த நாய்கள் இருக்கும், 26 இஞ்ச் உயரம் இருக்கும்.

பெட்டை நாய்க் குட்டிகள் எட்டு இருந்தால், இரண்டு ஆண் குட்டிகள் போதும். பெட்டை நாய் எட்டு மாதத்தில் சினைக்கு தயாராகிவிடும். அதே நேரம், ஆண் நாய்களை இரண்டு ஆண்டுகள் கழித்து பெட்டையுடன் சேர்ப்பதுதான் நல்லது. ஒரு நாய் சராசரியாக ஆறு குட்டிகள் வரை போடும். எட்டு மாதத்தில் 48 குட்டிகள் கிடைக்கும். பெட்டைக் குட்டி ஒன்று மூன்றாயிரம் ரூபாய் வரை விற்பனை ஆகிறது. ஆண் என்றால், நான்காயிரம் ரூபாய்.  எட்டாயிரத்தில் இருந்து பன்னிரெண்டாயிரம் வரை இன்று செல்கிறது. அதுவே சிப்பிபாறை அல்லது கன்னி நாய் வகைகள் ஏழாயிரம் முதல் விலை போகிறது.
வரவு/செலவு கணக்கு விவரங்கள்

0.5 ஏக்கரில் 12.0 மாதத்துக்கான வரவு/செலவு விவரங்கள்


இடத்தின் அளவு குத்து மதிப்பாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வரவு/செலவு கணக்கு ஒரு வருடத்திற்கானது. இரண்டாம் ஆண்டிலிருந்து நாய்குட்டிகள் வாங்கிய செலவை, வரவில் வைத்துக் கொள்ளலாம்.


விவரம்
செலவு (ரூபாயில்)
வரவு (ரூபாயில்)
பெட்டை நாய்குட்டிகள் 8 X 3000
24000.0
0.0
ஆண் நாய்குட்டிகள் 2 X 4000
8000.0
0.0
இடம்,தீவனம் மற்றும் இதர செலவுகள்
62000.0
0.0
நாய்க்குட்டிகளை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானம் ( 48 குட்டிகள் X 3000 )
0.0
144000.0

வருமானம் (வரவு - செலவு)
50000.0




பொதுவாக சிப்பிபாறை, கன்னி வகை நாய்கள் எல்லாம் வேட்டைக்கு பயன்படுபவை, ராஜபாளையம் மற்றும் கோம்பை நாய்கள் எல்லாம் வீட்டு காவலுக்கு நல்லது என்கிறார்கள். இந்த நாய்களை குட்டியில் இருக்கும்போது முப்பது அல்லது நாற்பது நாளில் விற்று விட வேண்டுமாம், இல்லையென்றால் தினமும் அதற்க்கு செலவு செய்வதால் நஷ்டம்தான் என்கிறார்.
 ராஜபாளையம் நாய் கன்னுகுட்டி உயரம், ஏறி நின்றால் நம்மை விட உயரம்

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா


அது ஏன் இந்த ஊர் பால்கோவா மட்டும் அவ்வளவு சுவை மற்றும் பிரபலம் என்று கேட்டால், அது அங்கு கிடைக்கும் பால் என்கிறார்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் ஆண்டாளுக்கு மிகவும் பிரபலம். அந்த காலத்தில் மாடுகள் நிறைய இருந்தனவாம் (இந்த காலத்திலும் கூட !), அதனால் மீதமாகும் பாலை வீணாக்காமல் இதை செய்ய ஆரம்பித்தார்கள். இன்று, அது அந்த ஊரின் சிறப்பகிவிட்டது. பால்கோவா கிண்டுவதற்கு காலையில் 6 மணியில் இருந்து மதியம் ஒரு மணி வரையும், திரும்பவும் மாலை ஆறரை மணி முதல் இரவு பத்து மணி வரையிலும் இதை செய்கிறார்கள். இதுதான் பால் வரும் நேரம் !! ஒரு நாளில் 600 கிலோ வரையிலும் கூட இங்கே பால்கோவா தயார் ஆகிறது !

ஒரு கேன் பால் என்பது பத்து லிட்டர், இதில் ஒன்றேகால் கிலோ ஜீனியை போட்டு மெதுவாக கலக்குகிறார்கள். இதை செய்ய கேஸ் அடுப்பு பயன்படுத்துவதில்லை, இன்றும் முந்திரி குப்பைகளை வைத்து எரிக்கிறார்கள். அதுவும் இந்த சுவைக்கு ஒரு காரணம் போலும் ! மெதுவாக அந்த பாலை கிண்ட கிண்ட அது சுண்டி வருகிறது. இங்கு பால்கோவா மட்டும் இல்லாமல் பால் அல்வா ஒன்றும் மிகவும் சுவையாக இருக்கும். பால் அல்வாவில் நெய், முந்திரி, பாதாம் என்று சேர்த்து இன்னும் கொஞ்சம் பதமாக செய்தால்....பால் அல்வா ரெடி !!
முடிவில் அந்த பதம் வர ஆரம்பிக்கும்போது பால் சிறிது மஞ்சள் நிறத்தில் ஆகிறது. பின்னர் அது கெட்டியாகி அந்த வாசனை உங்களது மூக்கை துளைக்க ஆரம்பிக்கும் பாருங்கள், அப்போதிலிருந்தே உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊற ஆரம்பிக்கும். பத்து லிட்டர் பால் கொண்டு செய்தால் ஒன்று அல்லது இரண்டு கிலோ வரை பால்கோவா கிடைக்கிறது ! நெருப்பிலே காய்ந்து இவர்கள் செய்யும் கைபக்குவதில்தான் இங்கே பால்கோவா அவ்வளவு சுவை போலும் !
முடிவில் அந்த பால்கோவா ரெடி ஆகும்போது கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது ஆற விடுகிறார்கள். பின்னர் ஒரு பிளாஸ்டிக் விசிறி கொண்டு நன்கு  வழித்து எடுத்து  ஒரு தட்டில் காய வைக்கிறார்கள். அது காயும்போதே அடுத்து பால் ஊற்றி இன்னும் பால்கோவா ரெடி ஆகிறது ! முடிவில் அந்த தட்டில் இருக்கும் பால்கோவாவை நன்கு கிளறி விட்டு பேன் கீழே காய வைக்கிறார்கள். அது நன்கு ஆறியவுடன் பாக்கிங் இடத்திற்கு செல்கிறது. இங்கு கால் கிலோ, அரை கிலோ, ஒரு கிலோ என்று எடை போட்டு, ஒரு கவரில் பாக் செய்கின்றனர். பின்னர் கடையில் இருந்து போன் செய்யும்போது வண்டியில் ஏற்றி அனுப்புகின்றனர்.


ஜிண்கர்தடாவின் பெயர் காரணம் தெரியுமா உங்களுக்கு ? ஜிகர் என்றால்
ஹிந்தியில் இதயம் என்று அர்த்தம்,  தண்டா என்றால் குளிர்ச்சி என்று அர்த்தம்.....இதன் தமிழ் பெயர் "இதயத்திற்கு குளிர்ச்சி தரும் பானம்" ! முகமதியர்கள் மதுரை நகரை ஆண்டபோதும், நமது முஸ்லிம் சகோதரர்கள் இங்கு வந்து குடியேறியபோதும் நமக்கு கிடைத்தது இந்த பானம். 
ஜிகர்தன்டாவில் சேர்க்கபடுவது என்பது  பால், பாதாம் ரெசின், கடல் பாசி / பாலாடை, சர்பத், சீனி, ஐஸ்க்ரீம் மற்றும் ஐஸ்கட்டி. இதில் உங்களுக்கு தெரிந்ததுதான் எல்லாமே..... கடல் பாசியை தவிர. கடல் பாசி என்பது கடலில் இருந்து கிடைக்கும் பாசி அல்ல. அதன் தோற்றத்தை வைத்து அந்தப் பெயர் வந்திருக்க வேண்டும். இது ஒரு வித செடியின் தண்டுப் பகுதியில் இருந்து எடுக்கப்படும், நைலான் போன்ற நார்ப்பகுதி. இதை China grass என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஜெல்லி வகை இனிப்புகள் இதில் இருந்துதான் செய்கின்றனர். 

தேவையான பொருட்கள்:

பால் - 1 டம்ளர்

பாதாம் ரெசின் - 2 ஸ்பூன்

கடல் பாசி / பாலாடை - தேவையான அளவு

சர்பத் - 4 ஸ்பூன்

சீனி - தேவையான அளவு

ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்

ஐஸ்கட்டி - தேவையான அளவு



செய்முறை :

பாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும். பின்னர் தேவையான அளவு சீனி சேர்த்துக் குளிர்சாதன பெட்டியில் வைத்துவிட வேண்டும். பாதாம் ரெசினை எடுத்துக்கொண்டு தண்ணீரில் கழுவி 8 மணிநேரம் நன்கு ஊறவைக்க வேண்டும். ஒரு கண்ணாடி டம்ளரில் குளிரவைத்த பால் கலவையை ஊற்றி, பிறகு, ஊறி இருக்கும் பாதாம் ரெசினை அதில் ஒரு ஸ்பூன் விடவேண்டும். இதில் வேண்டிய அளவு சர்பத் ஊற்றி, நமக்குத் தேவையான ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம் போட வேண்டும். அதற்கு மேல் கொஞ்சம் பாலாடையினை மிதக்க விட்டால், ஜில் ஜில் ஜிகர்தண்டா ரெடி!